Friday 27 January 2017

அறிவுத்தேனை பருக...

எண்ணிய எண்ணம் புத்தகங்களின் வண்ணம்
R. KumaraSethupathi
II M.A., English Literature 
நூல்களை நாட்கள் கடந்து வாசிக்க வேண்டும் என்ற எமது எண்ணம், நூல்களின் பக்கங்களை பிற வாசகர்களைப்போல் சில மணி நேரங்களில் வாசிக்க எண்ணிய என் மன ஏக்கம், முடியுமா அல்லது முயற்சி செய்யாமல் வாங்கும் புத்தகத்தை மூடி விடுவோமா என்ற எண்ணத்தினை எமக்குள் கொண்டு பயணித்தேன். புத்தக சாலைக்கு, பயணத்தின் இடைப்பட்ட காலத்தில் எம் மனதில் - "எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள், அவ்வண்ணங்களை நமக்குத்தருகின்றது புத்தகங்கள்" என்று எமக்குள் ஒலிக்கத்தொடங்கின. அதனை மனதில் ரசித்தபடி அடைந்தேன் புத்தக சாலையை!

நுழைவாயினை அடைந்த போது, இன்று இப்புத்தக கோலங்கள் எமக்கு என்ன வண்ணம் சூட்டப்போகிறதென்று அந்த சாலையினை என் கண்களில் விழிகளுக்குள் கொண்டு சென்றேன், அப்பொழுது எனக்கு தேன்கூடு அமைந்திருக்கும் மரம் நினைவிற்கு வந்தது, தேனீக்கள் கூட்டினைச்சுற்றி அமைவது போல், இங்கு அறிவுத்தேனை பருக வாசகர் பட்டாளம் சூழ்திருப்பதைப்பார்த்து, மனதில் சிறு நெகிழ்ச்சி. ஒவ்வொரு புத்தக கூட்டினிற்குள் சென்று வரும் பொழுது பல உரையாடல்களை அங்கு கேட்டு அதனை யோசித்து பயணித்தேன் அடுத்த கூட்டினை நோக்கி!

மனதினில் சிறு சலசலப்பு, யாம் படிக்க விரும்பிய புத்தகம் எதன் சுவையை நோக்கி இருத்தல் என்று எமக்குள் யோசித்தேன். அப்பொழுது எனக்குள் "எம்மை" போன்ற நிலைபொருந்திய சுவையினை தேடலாமோ என்ற எண்ணம் தோன்றியது, எம்மை என்று யாம் குறித்தலின் பொருள் என்னவென்றால் கோவையினை பிறப்பிடமாக கொண்ட நான், சென்னையினை கல்விபயிலும் பாடசாலையாக கொண்டுள்ளேன். கோவையை பிரிந்திருக்க எனக்கு ஒரு போதும் மனம் வந்ததில்லை.

அனால் தன் நாட்டையே விட்டு பிற தேசத்தில் வசிக்கும் அகதிகளின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எனக்குள் எப்பொழுதும் உண்டு. அவ்வகையில் அகதிகளைப்பற்றி அறிய வேண்டி பயணித்தேன் அதன் சுவையுடைய கிளையினை நோக்கி.

நீண்ட சுவைத்தேடலுக்கு பிறகு, இலங்கை போராட்டத்தினை பற்றியும் அதன் அகதிகள் பிற தேசத்தில் சந்திக்கும் இன்னல்களின் ஆழத்தினை பற்றியும்This Divided Island”, “The Hungry Ghost,” “The Professional,” என்ற தலைப்பில் இருந்த வண்ணங்களை எனக்கு உரித்தாக்கிக்கொண்டேன்.

பயணத்தொடக்கத்தில் எவ்வண்ண கோலங்கள் எனக்கு காத்திருக்கிறது என்று யோசித்தேன், முடிவில் என் எண்ணங்கள் புத்தக வண்ணங்களாக அமைந்ததினைக் கண்டு எனக்குள் என்னை நான் யாசித்தேன்.

No comments:

Post a Comment